Saturday, December 2, 2023

மருதூர் ஜமால்தீன்

 

குறும்பா என்றொரு நூல்
தந்தார்
"குறு நெல்" எனப்பெயரு
மிட்டார்
குறும்பர் தான் தீரர்
குணத்தாலும் சீரர்
குறுஞ்செய்தி அதுவாக்கி
வென்றார்
பலசெய்தி இந்நூலிலுண்டு
படிப்போர் நல்லறிவு கண்டு
பகுத்துணரல் நன்று
புரிந்துண்மை வென்று
புன்மைகளைந்திடுவீரின்று
பன்னூல்கள் தந்திட்ட தீரர்
பலகதைசொல்வதிலும்சூரர்
படித்திட்ட சமுகம்
பலவுண்மையுணரும்
பண்பான ஆன்மீகப்பாக்கள்
சத்தாகும் அவரிலக்கியப்
போக்கு
சறுகாது அவருண்மை
வாக்கு
சமுகத்து ஞானம்
சங்கமித்த கானம்
சான்றாக இனும்தரவூக்கு
இன்னுமே படைத்திடுங்கள்
நண்பா
இனிக்கின்ற நீருமொரு
வெண்பா
இத்தரையில் சிறந்து
இறையன்பில் நிறைந்து
இனிதாகத் திகழ்ந்திடத்துஆ