Sunday, March 22, 2026

உள்ளடக்கம்

 

குறுநெல்

குறும்பாக்கள்

தீரன் ஆர்.எம். நௌஷாத்

00

2௦ pages/2௦17 

00

கல்முனை பாவலர் பண்ணை வெளியீடு

00

சமர்ப்பணம்

கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்

ஐயா அவர்களுக்கு

00

 

முன்னுரை

 

குறும்பால் எறிந்த குறும்பாக்கள்

 

1977களில் அல்அசுமத்தின் 'பூபாளம்' சஞ்சிகை 'தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை' என்ற ஈற்றடியைத் தந்து ஒரு குறும்பாப் போட்டியை அறிவித்தது.. குறும்பாவின் விதிமுறைகள் பற்றிய எவ்வித இலக்கண அறிவும் இன்றி அதன் வடிவமைப்பை மட்டும் வைத்து நானும் இப்போட்டிக்கு ஒரு குறும்பாவை (?) அனுப்பி வைத்தேன்..

.."தமிழையே கொன்றிடுமவ்   விந்தை

தவறாது நடந்திடினும் மந்தைத்

தமிழ்வாசகர்கள்

தவழ்கின்ற இடம்தானே..

தமிழகத்துப் பத்திரிகைச் சந்தை.."

என்ற குறும்பா அது.. இதிலுள்ள இலக்கண வழுக்களைத் திருத்தி அதைப் பிரசுரம் செய்திருந்தார் பூபாளம் ஆசிரியர். இது ஒரு பெரிய உற்சாகமாக இருந்தது எனக்கு.

 

1980களில் என் தமிழ்க்குரு கொக்கூர் கிழான் கா.வை. இரத்தினசிங்கம் ஐயா அவர்களுடனான தொடர்பு ஏற்பட்டதன் பின்தான் அன்னாரிடமிருந்து குறும்பா பற்றிய அடிப்படை இலக்கண விதிகளையும், வடிவமைப்பாளர் மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களைப் பற்றியும் அறிய முடிந்தது.. குறும்பா என்னும் குறுவாளை முறைப்படி சுழற்றக் கற்றுக் கொடுத்தார் கொக்கூர் கிழான் ஐயா அவர்கள்.

 

மேலும் பல தேடல்களின் போது எஸ்.பொ., சில்லையூர் செல்வராசன், ஜவாத் மரைக்கார் எம்.எச்.எம். ஷம்ஸ் போன்றோரின் குறும்பாக் கள் மீதான கணிசமான பங்களிப்புகளை கண்டு வியந்தேன்...அன்று தொடக்கம் குறும்பாக் களின் குறும்புத்தனத்திலும் அவை வெளிப்படுத்தும் நகை உணர்விலும், அதீத சமூக உணர்விலும் ஒரு அலாதி ஈடுபாடு உண்டாயிற்று. இந்த உற்சாகத்தில் அச்சமயம் வெளியான பல சஞ்சிகைகள் - தினசரிகளில் ஏராளமாக குறும்பாக் களை எழுதிவந்தேன்.. இலங்கை வானொலி முஸ்லிம் சேவை வானொலி நாடகம் ஒன்றினை முழுக்க முழுக்க குறும்பாவிலேயே எழுதியிருந்தேன். 'காதிக்கோர்டு' என்ற இந்நாடகத்துக்கு ஒரு தாளுக்கு 15 பாக்களாக 16-17 பக்கங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட குறும்பாக் களை எழுதியிருந்தேன். 1982 களில் நான் நடத்தி வந்த 'தூது' கவிதைச் சஞ்சிகையிலும் ஆசிரியர் தலையங்கங்களையும் குறும்பா வடிவத்தில் எழுதிவந்தேன். இப்படி அந்தக் காலத்தில் ஒரு 'குறும்பா' பைத்தியம் இலக்கிய வீதிகளில் அலைந்து கொண்டிருந்தது..

 

பின்னர் புதுக்கவிதை - சிறுகதை - நாவல் போன்ற வேறு துறைகளில் என் கவனம் திருப்பப்பட்டதால் குறும்பா காய்ச்சல் கொஞ்சம் தெளிந்துவிட்டது..

 

மீண்டும் 2000களின் பின் இணையம் அறிமுகமானதன் பின் சிற்றிதழ் தளங்களில் தமிழகத்தில் எழுதப்படும் குறும்பாக் கள் என்று சிலவற்றைப் பார்த்தேன்.. அவற்றில் குறும்பா என்று நாம் நம்நாட்டில் காணுகின்ற சட்டகத்திலும், சட்டத்திலும் அமையாது குறும் - பாக்களாக சிலர் எழுதியிருந்தனர்.. ஹைக்கூ கவிதைகளையும், மூன்று, நான்கு வரிகள் கொண்ட புதுக்கவிதைகளையும் கூட குறும் - பாக்களாக தலைப்பிட்டிருந்தனர். அபூர்வமாக ஒருசில தமிழகக் கவிஞர்கள் நமது விதிகளைப் பின்பற்றியும் எழுதியிருந்தனர்.

 

இதனால் ஏற்பட்ட 'அருட்டுணர்வு' காரணமாக மீண்டும் குறும்பாக் கள் சில எழுதி ஒன்றுக்கும் அனுப்பாது என் வலைத்தளத்தில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன்.. இவற்றை 2013வாக்கில் எஸ்.ஆர். தனபாலசிங்கத்தின் 'நீங்களும் எழுதலாம்' சஞ்சிகைக்கு அனுப்ப பிரசுரமாயின..

 

இக்காலத்தில் முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தேன். முகநூலில் பதிவுகள் இட குறும்பா ஒரு நல்ல வடிவம் என்பதைக் கண்டுகொண்டேன்.. மீண்டும் என் குறும்பா பயணம் முகநூலில் தொடர்ந்தது... முகநூல் நண்பர்களும் மிக இரசித்து பின்னூட்டங்கள் இட்டிருந்தனர்.

இக்காலப் பகுதியில் குறும்பாவின இலக்கண விதிகள் நமது பொறுமையை அதிகம் சோதிப்பதாகவும், காய்-காய்-தேமா தேமாவிலும், கனிச்சீர்-விளச்சீர் தவிர்ப்பதிலும் நமது படைப்புநேரத்தை அது அதிகம் விழுங்குவதாகவும், இருக்கிறது என உணர்ந்தேன்... முகநூலில் விரைவிலேயே பதிவேற்றி விட்டு விலக முடியவில்லை... அந்நவீன கணிணித்தமிழை சட்டென்று பிரயோகிக்கவும் முடியவில்லை..

 

இச்சமயம், பாவேந்தல் பாலமுனை பாறூக் .பீர்முகம்மது சேர் போன்றோரும் குறும்பாவின சட்டங்கள் மீறப்படவும் அதன் சட்டங்கள் விரிவாக்கப்படவும் கூடியன என்ற வகையில் ஒரு புதிய போக்கை கையாளத் தொடங்கினர்.. கருத்துக்களும் கூறிவந்தனர். ஓலுவில் கவிஞர். வஹாப்தீனும், எஸ்.ஜலால்டீனும் குறும்பா விதிகளையிட்டு அதிகம் கவலைப்படாமல் இரு குறும்பா கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருந்தனர்.

 

இதுகூடச் சரிதான் என்று நானும் குறும்பாவுக்கான சட்ட - திட்டங்களை சற்று விலக்கிக் கொண்டும், உள்நின்றும் இதுவரை காலமும் எழுதிய நூற்றுக் கணக்கான பாக்களில் சகட்டுமேனிக்கு ஒருசில குறும்பாக் களை 'குறு-நெல்லாக விதைத்துவிட்டு காத்திருக்கிறேன். விளைச்சலுக்காக....

 

இக்குறும்பாக் களிநரசன் - தீரன்

இருக்கின்றேன் சாய்ந்தமரு - தூரன்

இத்தொப்பி யார்க்கெல்லாம்

இணக்கமானால் அணிந்திடுக

இதற்குமேல் பேச்சில்லை - வாரன்.

 

தீரன். ஆர்.எம். நௌஷாத்

No comments:

Post a Comment